இந்திய திரைப்படம் - ஒரு கற்பனை பதிவு !!!
விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த பின்பு பல வியக்கவைக்கும் சாதனங்கள் மனிதன்
அன்றாடம் உபயோகிக்கும் நிலைக்கு வந்துவிட்டான்.
மனிதன் நாகரிக அடைந்த காலத்திலிருந்து தன் கற்பனையை பதிவு செய்ய தொடங்கிவிட்டான். அந்த பதிவுகள் பின்னர் வந்த சந்ததியினர் அந்த கற்பனைக்கு வடிவமைப்பு கொடுக்க முயற்சித்தனர். பலர் அதில் வெற்றியும் கண்டனர்.
ஆனால், சில பகுதி மக்கள் தங்கள் முன்னோர் உருவாக்கிய கருவிகள், ஆயுதங்கள் மற்றும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் தங்களின் வரலாற்றை ஒருங்கே பதிவு செய்து வந்தனர். கற்பனையில் உருவாக்கிய பொருட்களை நிஜவடிவம் பெற அது பெரிதும் உதவியது.
நவீன காலத்தில் இத்தகு பதிவுகள் எப்பொழுதும் நம்மை சுற்றி பதிவு பெறுகின்றன. ஆனால் நாம் தான் இதனை இனம் கண்டு செயல்பட தவறிவிட்டோம். அத்தகிய பதிவுகளை தங்கி சுயலும் சுருள் தான் திரைப்படம்.
நான்
பழைய தமிழ் திரைப்படத்தை விரும்பி பார்ப்பேன். அதில் சில திரைப்படங்கள் மனிதனின் கற்பனைச்
சக்தி மற்றும் தொலைநோக்கு சிந்தனையையும் உலகிற்கு எடுத்து காட்டும்விதமாக
அமைந்துள்ளது. வாருங்கள் என்னுடைய கால இயந்திரத்தில் இந்த கற்பனை உலகில் சில காலம்
பின்னோக்கி பயணிப்போம்.
1. மாயாபஜார்
இந்த திரைப்படம் 1957 ஆண்டு வெளிவந்தது. இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளிவந்துள்ளது. இந்த படம் மகாபாரதத்தினை தழுவிய கதையாக வரும் அபிமன்யு-வத்சலா [சசிரேக்கா] திருமணம்
நிகழ்ச்சியை கதையாக கொண்டது.
இதில், கண்ணன் தன் அண்ணன் பலராமனின் மகளான வத்சலாவிருக்கு அர்ஜுனன் மகன் அபிமன்யு கொடுத்ததாக ஒரு
மாயஜால பெட்டியை கொடுப்பார். வத்சலா அந்த பெட்டியை திறந்து பார்த்தால் அபிமன்யு அதில் தோன்றுவது போல காட்சியமைதிருப்பார். நீங்களே அந்த காணொளியை இங்கு காண்பீர்.
இந்த மாயஜால பெட்டி தற்பொழுது நாம் உபயோகிக்கும் லேப்டாப், இன்டர்நெட், வீடியோ அண்ட் வாய்ஸ் சாட் போன்ற தொழில்நுட்பங்களை ஒத்திருக்கின்றது.
அன்று இந்த காட்சியை படம் எடுத்தவார்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை
கற்பனை செய்து பார்த்திருப்பர்களா என்று வியக்க தோன்றுகிறது.
குறிப்பு : நவீன கால மடிக்கணினியை [laptop] 1981ல் Adam Osborne என்பவர் Osborne Computers என்ற நிறுவனத்திற்காக கண்டுபிடித்தார்.
தற்பொழுது உபயோகத்தில் உள்ள மடிக்கணினியின் வடிவமைப்பும் திரைப்படத்தில் காட்டும் வடிவமைப்பும் நன்றாக ஒத்துபோகிறது.
நாம் தான் இந்தப் பதிவ நிஜ வடிவம் பெற முயற்சி செய்யவில்லை. இனியாவது நம் கற்பனையாளர்களின் கனவை நிஜப்படுத்த முயற்சி மேற்கொள்வோம்.
No comments:
Post a Comment